வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன் பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்பவானான பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கிவரும் ‘யூடியூப்’ நிறுவனம் வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது. இந்த விளம்பரங்கள் மூலம் வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களும் வருமானத்தைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்றதொரு வசதியினை பேஸ்புக் நிறுவனம் விரைவில் வழங்கவுள்ளது.
இதன்படி, பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களின் இடையே விளம்பரங்களை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், இவ்வாறு விளம்பரங்கள் வரும் வீடியோக்களுக்கு என்று சில சிறப்பியல்புகள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் குறைந்தது 90 வினாடிகள் ஓடக் கூடியதாக இருக்க வேண்டும்.
இவ்வாறான வீடியோக்களின் இடையில் மாத்திரம் 15 வினாடிகள் ஓடக்கூடிய விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படும.
வழக்கமாக யூடியூப் வீடியோக்களில் ஆரம்பத்திலேயே விளம்பரங்கள் காட்சிப்படுத்துவது வாசகர்களுக்கு இடையூறாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி விளம்பரங்கள் அனைத்தும் பாரம்பரிய தொலைக்காட்சிகளில் வெளியாகும் விளம்பரங்களைப் போன்றே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விளம்பரங்களின் ஊடாக கிடைக்கும் லாபத்தில் 55 சதவீத தொகையை வீடியோக்களை வெளியிடும் நபர்களுக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் விளம்பரம் மூலமாக மட்டும் சுமார் 700 கோடி டாலர்(96 சதவீதம்) அளவுக்கு வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாய் வளர்ச்சியின் பெரும்பகுதி, கைபேசி மூலமாக வரும் விளம்பர வருவாய் என தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு நிலவரத்தின்படி, நாளொன்றுக்கு 5 கோடி மக்கள் பேஸ்புக்கில் வீடியோக்களை காண்கின்றனர். அவர்கள் அனைவரும் வீடியோக்களை பார்க்கும் நேரம் அன்றாடம் சராசரியாக 10 கோடி மணிநேரமாக உள்ளது. இந்த பயன்பாட்டை சாதகப்படுத்திக் கொள்வதுடன் வருமானமாக்கும் முயற்சியில் பேஸ்புக் தற்போது களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Popular Posts
-
என் வலைப்பூவில் வருகை தரும் வாசகர்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலைய...
-
ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலையை விட்டு விடுங்கள. உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது . மிகவும் இ...
-
ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலையை விட்டு விடுங்கள. உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது . மிகவும் இ...
-
மனித வாழ்க்கை எத்தனை எதிர்பார்ப்புக்கள் நிறைந்து என்பதை நகைச்சுவை உடன் குறும்படம் ஒரு யட்டிக்காகவா??
-
மனித வாழ்க்கை எத்தனை எதிர்பார்ப்புக்கள் நிறைந்து என்பதை நகைச்சுவை உடன் குறும்படம் ஒரு யட்டிக்காகவா??
-
ஜேசு என்பவர் யார் ? அவர் ஏன் இந்த உலகத்திற்க்கு வந்தார். கிறிஸ்தவம் என்பது வெள்ளைகாரனின் மதமா?? ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜ...
-
ஜேசு என்பவர் யார் ? அவர் ஏன் இந்த உலகத்திற்க்கு வந்தார். கிறிஸ்தவம் என்பது வெள்ளைகாரனின் மதமா?? ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜ...
-
இன்றைய காலத்தில் ஆண் பெண் நண்பர்களாக நீண்ட நாட்கள் இருக்க முடிவதில்லை. அவ்வாறு நண்பர்களாக பழகும் போது, அவர்களுக்குள்ளேயே ஒருவித வித்தியாசமான...
-
புத்தாண்டு வந்துவிட்டது முதல் இடுகையாக ஒரு கீரோவைப்பற்றி எழுதுவோம் என நினைத்தேன். தைமாதம் 6ம் திகதி 1955ம் ஆண்டு பிறந்தார். அவர் ஓக்ஸ்போட்...
Blog Archive
-
▼
2017
(119)
-
▼
January
(10)
- தலைநிமிர வைத்த தமிழக இளைஞர்கள்: வட இந்திய பெண்ணின்...
- டொனால்ட் ட்ரம்புக்கு பிரான்ஸ் கடும் எச்சரிக்கை விட...
- தலைநிமிர வைத்த தமிழக இளைஞர்கள்: வட இந்திய பெண்ணின்...
- இந்தியா இலங்கை பிரதமர்கள் செய்யாததை கனடா பிரதமர் ...
- புதிய வசதியை அறிமுகப் படுத்தும் பேஸ்புக்
- தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் அதிசய நாய்
- உனக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன்
- முகநூலூடாக காதலித்த காதலனை சந்திக்க சென்ற தமிழ் ப...
- வாட்ஸ் ஆப் பாவனையாளர்கள் அவதானம்
- ஏன் என் இதயத்தை இரண்டாக்கி சென்றாய்
-
▼
January
(10)
0 comments:
Post a Comment